Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ashoka Halwa Recipe:சுவையான இனிப்பு..நெய் வாசனை மணக்க அசோகா எளிதாக செய்யலாம்? இதோ ரெசிபி!
அசோகா எப்படி செய்வது என்று காணலாம். தேவையான பொருட்கள்! பாசிப்பருப்பு - அரை கப், சர்க்கரை ஒரு கப், ஏலக்காய்த்துாள் - கால் டீஸ்பூன், சிவப்பு நிற புட் கலர் சிறிதளவு, கோதுமை மாவு ஒரு தேக்கரண்டி, நெய் தேவையான அளவு, உடைத்த முந்திரி - 5 மேஜைக்கரண்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்தெடுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன், தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைவாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், இரண்டு தேக்கரண்டி நெய்விட்டு, முந்திரியை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து நன்கு வறுக்கவும்.
அதனுடன் மசித்த பருப்பு, சர்க்கரை, புட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, இடையிடையே தேவையான அளவு நெய்விட்டு, கைவிடாமல் கிளறவும்.
கலவை நன்கு சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். வறுத்த முந்திரியை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -