Nethili Meen Kulambu : கிராமத்து ஸ்டைலில் நெத்திலி மீன் குழம்பு ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் - 1/2 கப், சீரகம் - 1/2 தேக்கரண்டி , நெத்திலி மீன் 1 கிலோ, தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, சிறிய வெங்காயம் - 1 கப் , பச்சை மிளகாய் - 2 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி , தக்காளி - 1 , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, மல்லித்தூள் - 1 தேக்கரண்டி, புளிக்கரைசல் - 1/2 கப், கறிவேப்பிலை, தண்ணீர், தேவையான அளவு உப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் சூடேற்றிய பிறகு கடுகு, வெந்தயம், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்த பிறகு, சுத்தம் செய்த நெத்திலி மீனை சேர்த்து கரடியைவைத்து மீன் உடையாமல் பக்குவமாக கிளறிவிடவும்.
அதன் பின் ஐந்து நிமிடத்திற்கு மீன் குழம்பை மூடிய நிலையில் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். 5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -