Egg Rice: சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : மிளகு - 2 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்ட, சோம்பு - 1 தேக்கரண்டி , பட்டை, கிராம்பு - 3 , ஏலக்காய் - 1 , பாஸ்மதி அரிசி - 1 கப், முட்டை - 7 , எண்ணெய் - 4 மேசைக்கரண்டி , பூண்டு - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 , வெங்காயம் - 1 , கறிவேப்பிலை, தக்காளி - 2 , உப்பு -1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , அரைத்த மசாலா தூள், வெங்காயத்தாள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்து நன்கு பொடியாக அரைக்கவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதனோடு கறிவேப்பிலை , நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த மசாலாத்தூளை சிறிதளவு சேர்த்து வதக்கவும். அடுத்தது மசாலாவை ஒரு பக்கமாக நகர்த்தி, அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
கடாயை மூடி மிதமான தீயில் 1 நிமிடம் வேகவிடவும். அதன் பிறகு மூடியை விளக்கி கிளறிவிட்டு மேலும் 2 நிமிடம் வேகவைக்கவும்.
அதன் பிறகு அரைத்த மசாலாத் தூளை சேர்த்து கடைசியாக வேகவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திர முட்டை சாதம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -