Verkadalai Thakkali Thuvaiyal : சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல்.. இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்!
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 தேக்கரண்டி , வேர்க்கடலை - 1 கப், தனியா -1 1/2 டீஸ்பூன் , சீரகம் – 1 டீஸ்பூன் , எண்ணெய் - 2 தேக்கரண்டி, தக்காளி - 2, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3 , புளி, உப்பு தேவையான அளவு , மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி , வெங்காயம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை போட்டு வறுக்கவும்
கடலை பொன்னிறமாக மாறியதும் சீரகம், கொத்தமல்லி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த கடலையை ஆறவைக்கவும்.
அடுத்தது, கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு , புளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வதக்கிய தக்காளி கலவையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த தக்காளி விழுதோடு வேர்க்கடலையை தாளித்து எடுத்தால் சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -