Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vazhakkai Vadai : வாழைக்காயில் வடை .. செய்து பாருங்க வித்தியாசம் தெரியும்!
தேவையான பொருட்கள் : உப்பு - 1/2 தேக்கரண்டி , பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, சீரகம் - 1/2 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி , அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி , எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : வாழைக்காயை தோலை சீவிவிட்டு சின்ன துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 விசில் வந்த பின் எடுத்துக்கொள்ளவும்
வாழைக்காய் துண்டுகளை ஆறவிட்டு மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
அடுத்தது பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிய அளவு எடுத்து வடை போல் தட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடையை பொன்னிறமாக மிதமான சூட்டில் பொரித்து எடுத்தால் வாழைக்காய் வடை தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -