Finger Millet Laddu : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 1 கப், முந்திரி பருப்பு - சிறிதளவு , தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் தூள், நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது அதே கடாயில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை மாற்றி, அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
அடுத்தது காய்ச்சி வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டை பிடித்து எடுத்தால் சுவையான கேழ்வரகு லட்டு தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -