Vazhakkai Thengai Poriyal : இந்த வாழைக்காய் தேங்காய் வறுவலை செய்தால் சாதம் மீறாமல் சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள் : வாழைக்காய் - 2 , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பூண்டு - 7 பற்கள், உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் - 1/2 கப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் குக்கரில் வாழைக்காயை தோளோடு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்பு தோல் நிக்கி நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து வறுக்கவும். கடுகு பொரிந்த உடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது பூண்டை இடித்து சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். அதன் பின் உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்தது வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
வாழைக்காயை தேங்காய் உடன் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக 10 நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான வாழைக்காய் தேங்காய் வறுவல் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -