Potato Bajji : டீ கடை ஸ்டைலில் உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்வது எப்படி?
அனுஷ் ச | 07 Aug 2024 11:06 AM (IST)
1
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் சிட்டிகை, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை , தண்ணீர்
2
செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
3
அடுத்தது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
4
அதன் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
5
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை பஜ்ஜி மாவில் சேர்த்து மசாலாவில் தடவிக் கொள்ளவும்.
6
அதன் பின் உருளைக்கிழங்கை எண்ணெயில் சேர்த்து இருபுறமும் ஒரு ஒரு நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி தயார்.