Varagarisi Upma : சுத்தான வரகரிசி உப்மா.. இந்த சூப்பரான டிஃபனை செய்து பாக்க மறந்துடாதீங்க!
தேவையான பொருட்கள் : வரகரிசி - 1 கப், நெய் - 3 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 6 கீறியது , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, கேரட் - 1 கப் நறுக்கியது , பீன்ஸ் - 1 கப் நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி.
செய்முறை : முதலில் வரகரிசியை நன்கு கழுவி, அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு குக்கரில் நெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு ஒரு நிமிடம் வறுக்கவும். அதன் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்தது பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்தது ஊறவைத்த வரகரிசியை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் வைத்து வேகவைக்கவும்.
ஒரு விசில் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான வரகரிசி உப்மா தயார்.