Cooking Tips : சப்பாத்தி முதல் குருமா வரை..ருசியாக செய்ய சிறப்பான டிப்ஸ் இதோ!
சப்பாத்தி மாவு பிசையும் போது நெய், எண்ணெய், பால் மூன்றையும் சேர்த்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக வரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுருமா செய்யும் போது வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து சேர்த்து குருமா சுவையாக இருக்கும்.
சாம்பாருக்கு துவரம் பருப்பு வேகவைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
வெந்தய கீரை சப்பாத்தி செய்யும் போது சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டை தண்ணீரில் நினைத்து மாவோடு சேர்த்து பிசைந்து பூரி செய்தால் மொறு மொறுவென வரும்.
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ரசத்தை கொதிக்க விட்டு மிளகு சீரகத்தூள் சேர்த்து அரை மூடி எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் உப்பு குறைந்து விடும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -