Tofu Salad: ஹெல்தி ஸ்நாக்- புரதம் நிறைந்த டோஃபு சாலட் - ரெசிபி!
பாசிப் பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். இதை வேகவைத்தும் பயன்படுத்தலாம். இல்லையெனில், அப்படியே பயன்படுத்தலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநிலக்கடலையை வேகவைத்து எடுக்கவும். தக்காளி, பீட்ரூட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். டோஃபுவை விருப்பமெனில் சிறிதளவு வெண்ணெயில் வறுத்து எடுக்கலாம்.
ஒரு பவுலில் நறுக்கிய பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, அவகேடோ, வேகவைத்த நிலக்கடலை, பாசிப்பருப்பு எல்லாவற்றை சேர்க்கவும்.
இதோடு உப்பு, புதினா பேஸ்ட், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கினால் சுவையான டோஃபு சாலட் தயார்.
டோஃபு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், கஸ்தூரி மேத்தி, உப்பு அனைத்தையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நல்லா சூடானதும் டோஃபு துண்டுகளை கடலை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ருசியான டோஃபு பக்கோடா ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -