Irani Chai:சுவையான ஐதராபாத் இரானி டீ செய்முறை இதோ!
இரானி டீ பிடிக்கும் என்பவர்கள் வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம். தேவையான பொருட்கள் டீ தூள் - 2 மேசைக்கரண்டி முழு கொழுப்புள்ள பால் - 500 மில்லி சர்க்கரை - 2 தேக்கரண்டி கன்டென்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் - 2 தண்ணீர் - 2 கப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும். இதில் டீ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடாக்கவும்.
பாத்திரத்தில் மூடி, சப்பாத்தி மாவால் சீல் செய்யவும். இதை 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
டீ டிகாஷன் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். கசப்புத்தன்மை இல்லாமல் பார்த்துகொள்ளவும்.
மற்றோரு பாத்திரத்தில், பால் சூடாக்கவும். இதில் ஏலக்காய் சேர்த்து, அளவில் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிண்டவும். பரிமாறும் கிளாஸ்'ஸில் டீ டிகாஷன் ஊற்றி, இதன் மேல் பால் ஊற்றவும். ஹைதெராபாதி இரானி டீ தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -