Health Care: நெஞ்செரிச்சல், சளி தொல்லையால் அவதியா? - இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
இஞ்சி சாறு 5 மி.லி., , எலுமிச்சை சாறு 5 மி.லி., தேன் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காலையில் குடித்தால் நெஞ்செரிச்சல் குறையலாம்.
2 துண்டு இஞ்சி, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து டீயாக குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படலாம்.
500 மி.லி., தண்ணீர், 5 கிராம்பு, ஒரு இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தொல்லை குறையலாம்
500 மி.லி., தண்ணீர், அரை டீஸ்பூன் சீரகம், ஒரு துண்டு இஞ்சி, 2 கிராம்பு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி தேன் கலந்து காலையில் குடித்தால் உடல் எடை குறையலாம்.
வெற்றிலை நடுவில் கால் டீஸ்பூன் சோம்பு, மிளகு, 2 கருப்பு திராட்சை சேர்த்து மதிய உணவிற்கு பிறகு சாப்பிட்டால் உடல் எடை குறையலாம்,
3 நெல்லிக்காய், இஞ்சி ஒரு துண்டு, கருவேப்பில்லை, 50ml தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டாமல் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையலாம்.