Thuvaiyal Omelette : சுவையான துவையல் ஆம்லேட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்!
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 தேக்கரண்டி, பூண்டு - 5 பற்கள், காய்ந்த மிளகாய் - 6 , சீரகம், புளி - 3 துண்டு, துருவிய தேங்காய் - 1 கப், கறிவேப்பிலை , கல் உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், முட்டை - 1 , நல்லெண்ணெய்
செய்முறை : முதலில் ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
அடுத்தது சீரகம், புளி, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் வைத்து வறுக்கவும். அதன்பின் கல் உப்பு சேர்த்து கலந்துவிட்டு ஆற விடவும்.
ஆறவைத்த மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த துவையலை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஆம்லேட்டை இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான துவையல் ஆம்லேட் தயார்