Thuvaiyal Omelette: ஆம்லெட் ப்ரியரா? இப்படி செய்து பாருங்க;சுவையாக இருக்கும்!
முதலில் ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீரகம், புளி, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
அடுத்து கல் உப்பு சேர்த்து கலந்துவிட்டு நன்கு ஆற விடவும். ஆறிய மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீரின்றி அரைக்கவும்.
தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த துவையல் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் முட்டை கலவையை ஊற்றவும். ஒரு பக்கம் வெந்தவுடன் மறு பக்கம் திருப்பி விட்டு வேகவிடவும். சுவையான துவையல் ஆம்லேட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -