Beauty Tips : முகத்தை பிரகாசிக்க வைக்கும் சூப்பரான டிப்ஸ் இதோ!
அனுஷ் ச | 05 Jun 2024 02:11 PM (IST)
1
தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், 1 டீஸ்பூன் பச்சை அரிசி மாவு ஆகியவற்றை எடுத்து கலந்து கழுத்து பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கருமை நிறம் மறைந்துவிடலாம்.
2
வடித்த கஞ்சியில் சிறிது நீர் சேர்த்து ஒரு சிட்டிக்கை அளவிற்கு மஞ்சள் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு குறையலாம்.
3
உருளைக்கிழங்கு தோலை சீவி கண்களில் 30 நிமிடங்கள் வைத்தால் கண் கட்டி குறையலாம்
4
வெள்ளரி துண்டுகளை வட்டமாக வெட்டி கண்களில் வைத்தால் கருவளையம் காணாமல் போகலாம்
5
கற்றாழை சாறுடன் சந்தனத்தை கலந்து முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.