Thinai Upma : சத்துமிக்க தினை உப்புமா.. காலையில் செய்து சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள் : திணை - 1/2 கப், கடலை பருப்பு - 2 தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/ 2 தேக்கரண்டி, வெங்காயம் - 1 , பச்சை மிளகாய் -2 , இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை.
செய்முறை : முதலில் திணையை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் நெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன்பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும்,தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
அடுத்தது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி வைத்து 5 நிமிடம் காய்கறிகளை வேகவைக்கவும்.
அடுத்தது ஊறவைத்த திணையை சேர்த்து கடாயை மீண்டும் மூடி வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து இறக்கினால் சுவையான திணை உப்புமா தயார்.