Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bagara Rice : தெலுங்கானா ஸ்பெஷல் பகாரா ரைஸ்.. பிரியாணி பிரியர்கள் ட்ரை பண்ணி பாருங்க!
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி, 250 மி.லி தண்ணீர், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி , பட்டை - 3 துண்டு, ஏலக்காய் - 2 , கிராம்பு - 4 , அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை - 2 , வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி , தக்காளி - 1 நறுக்கியது, புதினா - 1 கிண்ணம் நறுக்கியது, கொத்தமல்லி இலை, உப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
அடுத்தது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
அடுத்தது உப்பு, ஊறவைத்த அரிசி சேர்த்து தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
அதன்பிறகு அரிசியை கிளறிவிட்டு பாத்திரத்தை மூடி வைத்து மீண்டும் 5 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பகாரா ரைஸ் தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -