Cooking Tips : இப்படி செய்தால் அடுத்த நாளும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்!
அனுஷ் ச | 11 Aug 2024 02:02 PM (IST)
1
சப்பாத்தியை தோசை கல்லில் வேகவைக்கும் போது எண்ணெய் ஊற்றாமல் சப்பாத்தி பாதி வெந்த பிறகு எண்ணெய் ஊற்றினால் மிருதுவாக வரும்.
2
ரசம் வைக்கும் போது கறிவேப்பிலைக்கு பதில் முருங்கை இலை சேர்த்து இறக்கினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
3
சர்க்கரை பொங்கல் செய்யும் போது அரிசியில் நெய் சேர்ப்பதுடன் பசும் பால் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4
வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது இஞ்சி பூண்டு அரைக்கும் போர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து அரைத்து பிரியாணியில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
5
கொத்தமல்லி சட்னி செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
6
சாம்பாரில் புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் புளிப்பு குறைந்துவிடும்.