Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Toor Dal Kebab : சைவம் சாப்பிடுபவர்களுக்கான சூப்பரான சிற்றுண்டி.. பருப்பு கபாபை செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு- 2 கப், வெங்காயம் - 1 , பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 3 , உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு - 1 டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன், சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் துவரம் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற எடுத்துக் கொள்ளவும். 2 மணி நேரத்திற்கு பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
அடுத்தது துவரம் பருப்போடு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், சிவப்பு மிளகாய் துகள்கள், சீரகத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடைசியாக சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்தது கலந்து வைத்துள்ள மசாலாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்த மாவை உள்ளங்கையில் வடை போன்று தட்டிக்கொள்ளவும்
அடுத்தது ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை போல் தட்டி வைத்துள்ள மாவை இருபுறம் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான துவரம் பருப்பு கபாப் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -