Tomato Pulao : சுவையான தக்காளி புலாவ்.. குழந்தைகளுக்கு மதியம் கட்டி கொடுங்க!
தேவையான பொருட்கள் : 1 கப் பாசுமதி அரிசி, 4 தக்காளி, 1 கை அளவு பச்சை பட்டாணி, 3 பெரிய வெங்காயம், 8 to 10 முந்திரி, 1 இஞ்சி துண்டு, 2 பூண்டு பல், 1 பச்சை மிளகாய், 4 சிவப்பு மிளகாய், 1 நட்சத்திர பூ, 2 ஏலக்காய், 2 பட்டை துண்டு, 3 கிராம்பு, 1 ஜாதி பத்திரி, 1 பிரியாணி இலை, 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 கை அளவு கொத்தமல்லி, 1 கை அளவு புதினா, நெய் தேவையான அளவு, உப்பு
செய்முறை: முதலில் பாசுமதி அரிசியை கழுவி ஊற வைக்கவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், வெங்காயம் நறுக்கியது, சிறிதளவு கொத்தமல்லி புதினா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
அடுத்தது குக்கரில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதி பத்திரி, நட்சத்திர பூ, மற்றும் பிரியாணி இலையை வதக்கவும். அதன் பின் முந்திரி நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
அடுத்தது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறிவிட்டு மணம் நீங்கும் வரை வதக்கவும்.அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அதன் பின் பச்சை பட்டாணி, தக்காளி சேர்த்து வதக்கவும். புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.அதன் பின் பாசுமதி அரிசி சேர்த்து உடையாமல் கிளறிவிடவும்.
அரிசி மசாலாவுடன் சேர்ந்த பின் ஒரு டீஸ்பூன் நெய், ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். 15 நிமிடத்திற்கு பிறகு ஒரு பிளேட்டில் பரிமாறினால் சுவையான தக்காளி புலாவ் தயார்