Cooking Tips : கிழங்கு வகைகளை சீக்கிரமாக வேகவைக்க இதை செய்யுங்க!
அனுஷ் ச | 17 Jun 2024 12:53 PM (IST)
1
சாம்பாரில் காரம் அதிகமானால் புளியை கரைத்து சேர்க்கலாம் அல்லது பருப்பை வேகவைத்து சேர்த்து கொதிக்க விடலாம்.
2
கருணைக்கிழங்கு வேகவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
3
கத்தரிக்காய், வெண்டைக்காய் காரக்குழம்பு செய்யும் போது ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
4
பாயசம் செய்யும் போது முந்திரி திராட்சையோடு பேரிச்சம்பழத்தை சின்னதாக நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
5
ரசத்தில் புளிப்பு சுவை குறைந்துவிட்டால் மாங்காய் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து விட்டால் புளிப்பு சுவை சரியாகிவிடும்.
6
கிழங்கு வகைகளை உப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு சமைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.