Thakkali Thokku : சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 20 , பூண்டு - 6 பற்கள், பச்சை மிளகாய் - 2 , கறிவேப்பில்லை, தக்காளி - 4 , உப்பு, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள், தண்ணீர் - 1 1/2 கப், அரிசி மாவு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு குக்கரில், எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்தது இடித்த பூண்டு,தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது கல் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லி தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும். அதன்பின் அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து அரிசி மாவை குழம்புடன் சேர்க்கவும் மீண்டும் 2 நிமிடம் கொதிக்கவைத்து கொத்தமல்லி இல்லை சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி தொக்கு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -