Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Egg Curry : சுவையான மண் பானை முட்டை குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு - 4 , உடைத்த கடலை - 1 தேக்கரண்டி , சோம்பு - 1/2 தேக்கரண்டி, தேங்காய் - 3 தேக்கரண்டி, கச கசா - 1/2 தேக்கரண்டி, தண்ணீர் ,எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , கடுகு -1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி , பெரிய வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 1 , இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி , தக்காளி - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி ,மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, வேகவைத்த முட்டை - 5 ,உப்பு , கொத்தமல்லி இலை , கறிவேப்பிலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் முந்திரி பருப்பு, உடைத்த கடலை, சோம்பு, துருவிய தேங்காய், கச கசா, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண் சட்டியில் எண்ணெய், கடுகு, சீரகம், சோம்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.
அடுத்தது இந்த வெங்காய தக்காளி கலவையில் அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும், அதன் பின் வேகவைத்த முட்டையை மெல்லிதாக கீறி குழம்பில் சேர்க்கவும்.
சிறு தீயில் மூடிய நிலையில் பத்து நிமிடம் குழம்பை கொதிக்க வைக்கவும். கொத்தமல்லி இலையை தூவி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மண் பானை முட்டை குழம்பு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -