Cooking Tips : சிக்கன் பொன்னிறமாக வருவதற்கு இதை செய்யுங்க!
அனுஷ் ச | 03 Jun 2024 06:00 PM (IST)
1
பாதாம் பருப்பு ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்க ஒரு டீஸ்பூன் சர்க்கரையை பாதம் வைத்திருக்கும் பாத்திரத்தில் போடவும்.
2
கிழங்கு வகைகள் சீக்கிரம் வேகுவதற்கு உப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்த பிறகு வேக வைக்கவும்.
3
தயிர் செய்வதற்கு நான்கு காய்ந்த மிளகாய் காம்பை கிள்ளி பாலில் போட்டு வைத்தால் அடுத்தநாள் தயிர் தயாராகிவிடும்.
4
சாதம் வடிக்கும் போது இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் சாதம் உதிரி உதிரியாக வரும்.
5
மிளகாய் பொடி அரைக்கும் போது எள்,மிளகு, கடுகு வறுத்து மிளகாயோடு சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும்.
6
சிக்கன் வறுக்கும் போது அதில் சிறிதளவு மயோனஸை தடவி வறுத்தால் சிக்கன் பொன்னிறமாக வரும்.