Vermicelli Sweet: நாவில் எச்சில் ஊறும் சுவையில் சேமியா ஸ்வீட்.. செய்முறை இதோ!
அரை மூடி தேங்காயை எடுத்து அதை கீற்றுகளாக எடுத்து அதன் தோல் பகுதியை மட்டும் சீவி விட வேண்டும். அப்போது தான் தேங்காயை அரைக்கும் போது முற்றிலும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் பான் அல்லது கடாய் வைத்து அதில் ஒரு கப் சேமியா சேர்த்து வறுக்கவும். சேமியா வறுபட்டதும் இதில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
சேமியா வெந்ததும், ஒரு கப் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை, உணவு நிறமி உங்களுக்கு வேண்டிய நிறத்தில் ஒரு சிட்டிகை. சேமியாவில் தண்ணீர் குறைந்து, அல்வா பதம் வந்ததும் இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து அதில் 6 முந்திரிகளை சேர்த்து வறுத்து, அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் நன்றாக வறுக்கவும்.
பின் சர்க்கரை சேர்த்து வேக வைத்து வைத்துள்ள சேமியாவை இதில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சேமியா ஸ்வீட் ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -