Hair Care : கோடையில் ஏற்படும் முடி உதிர்தலை குறைக்க இந்த உணவுகளை டயட்டில் சேருங்க!
வால் நட்ஸ், பாதாம் , பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் ஒமேகா-3, புரதச்சத்து மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவகேடோவில் வைட்டமின் சி, கே, ஈ, பி6, பொட்டாசியம், ஃபோலேட், போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தை சாப்பிட்டால் 20-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. அடிக்கடி அவகேடோ சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.
முடி உதிர்வை குறைக்க கீரை சிறந்த உணவாகும். இரும்பு சத்து குறைபாட்டினால் முடி உதிர்தல் ஏற்படுகின்றன. கீரை வகைகளில் இரும்பு அதிகமாக இருப்பதால், அதை தினசரி உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
பீட்டா கரோட்டின் கொண்ட இனிப்பு உருளைக்கிழங்கு முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை பளபளப்பாக்கும்
முடி வளர்வதற்கு கால்சியம் அவசியம். பால், தயிர்,சீஸ் போன்ற பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் பி-12, புரதம், இரும்பு , கால்சியம் போன்றவை முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
கிட்னி பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலையில் உள்ல துத்தநாகம், இரும்பு, பயோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை தலைமுடியை பராமரிக்க உதவுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -