Semiya Kesari : அடடே சேமியாவை வைத்து கேசரி கூட செய்யலாமா? வாங்க பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் : நெய் - 5 டீஸ்பூன், சேமியா - 1 கப், தண்ணீர் - 2-1/2 கப், கேசரி பொடி - 1 சிட்டிகை, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், சர்க்கரை - 3/4 கப், முந்திரி, திராட்சை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பானில் நெய் ஊற்றி அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்க்கவும். சேமியா பாதி வெந்த நிலையில் கேசரி பொடியை சேர்த்து கிளறவும்.
கேசரி பொடி சேர்த்து மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும். அடுத்தது ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்தது 4 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடிவைத்து 15 நிமிடம் மீதமான தீயில் வேகவைக்கவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான சேமியா கேசரி தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -