Chicken Podimas : முட்டையில் பொடிமாஸ் போட்டு இருப்பீங்க.. சிக்கனில் இப்படி செய்து இருக்கிறீர்களா?
தேவையான பொருட்கள்: சிக்கன் - 300 கிராம் வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1 ,பொடியாக நறுக்கியது, தக்காளி - 1 பொடியாக நறுக்கியது , கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, முட்டை - 2 , கறிவேப்பிலை , நல்லெண்ணெய் , பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு , உப்பு, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் குக்கரில் சிக்கன் துண்டுகள் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். சிக்கன் வெந்த பிறகு சிக்கன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்தது சிக்கன் துண்டுகளை ஆற வைத்துவிட்டு சிக்கன் துண்டுகளை சின்ன சின்னதாக கொத்தி கொள்ளவும். அடுத்தது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்தது பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்தது இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
அடுத்தது மூன்று நிமிடம் கழித்து வேகவைத்த சிக்கன் தண்ணீரை கடாயில் சேர்த்து மசாலாவோடு சேர்த்து கிளறிவிடவும். அடுத்தது பிய்த்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை கடாயில் சேர்த்து மசாலாவுடன் வதக்கவும்.
அடுத்தது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், இரண்டு முட்டைகளை உடைத்து சிக்கனுடன் சேர்த்து 5 நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால் சுவையான சிக்கன் பொடிமாஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -