Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rice Chapati : சாதம் மீதமாகிவிட்டதா? அதை வைத்து மிருதுவான சப்பாத்தி செய்யலாம்..
தேவையான பொருட்கள் : வெள்ளை சாதம் - 1 கப், கோதுமை மாவு - 1 கப், உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய், நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு மிக்சர் ஜாரில் மீதமான சாதம், உப்பு மற்றும் கோதுமை மாவை சேர்த்து கட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கோதுமை மாவு, எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதன்பிறகு மாவு மீது எண்ணெய் தடவி பாத்திரத்தை மூடி மாவை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்தது சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து கொள்ளவும்.
அடுத்தது அடுப்பில் பானை வைத்து தேய்த்த சப்பாத்தியை சேர்த்து சிறிதளவு நெய் தடவி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான ரைஸ் சப்பாத்தி தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -