Chickpea Dosai : சத்துமிக்க கொண்டைக்கடலை தோசை.. எப்படி செய்வதென்று பார்க்கலாம்!
தேவையான பொருட்கள் : கொண்டக்கடலை - 250 மி.லி, பச்சரிசி - 1/2 கப் ,வெந்தயம் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, தண்ணீர், உப்பு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 /2 தேக்கரண்டி, நெய்.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதேபோல் மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி, வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பின்பு 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
அடுத்தது மாவில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் சீரகம் சேர்த்து மாவை நன்கு கலக்கி கொள்ளவும்.
அடுத்தது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றவும். அதன்பின் சுற்றிலும் நெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்.