Rasmalai : ரசமலாய் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த மாதிரி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர், எலுமிச்சை - 2 பழம், சோள மாவு - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 4 கப், சர்க்கரை - 1 கப், பால் -500 மில்லி , குங்குமப்பூ, சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, பிஸ்தா, பாதாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் கொழுப்பு நிறைந்த பாலை ஊற்றி கொதிக்கவிடவும். அதில் இரண்டு பழம் எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு திரிய விடவும்.
அதன் பிறகு திரிந்த பாலை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதன்பிறகு திரிந்த பாலில் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை வடை போல தட்டி வைத்து கொள்ளவும்.
அடுத்தது, சர்க்கரை பாகு காய்ச்ச, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை பாகில் செய்த உருண்டைகளை சேர்த்து 15 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பிஸ்தா மற்றும் பாதம் நறுக்கி சேர்க்கவும்.
10 நிமிடம் கொதித்த பிறகு அடுப்பிலிருந்து பாலை இறக்கவும், அந்த உருண்டைகளை பாலில் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைத்தால் சுவையான ரசமலாய் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -