Cooking Tips: டீ பிரியரா நீங்க? அப்போ இந்த மாதிரி டீ போட்டு பாருங்க. சூப்பரா இருக்கும்!
அனுஷ் ச | 14 Jul 2024 02:45 PM (IST)
1
டீ பிரியரா நீங்க? அப்போ இந்த மாதிரி டீ போட்டு பாருங்க சூப்பரா இருக்கும்தண்ணீரில் கிராம்பு, ஆரஞ்சு தோல், டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து டீ போட்டால் சுவையாக இருக்கும்.
2
சீடை வெடிக்காமல் இருக்க சீடை உருடைகளை ஊசியில் குத்திய பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
3
வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது கடைசியாக மிளகு தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
4
குருமாவுக்கு மசாலா அரைக்கும் போது அதனோடு தக்காளியை சேர்த்து அரைத்தால் குருமா அட்டகாசமாக இருக்கும்.
5
அசைவ குருமா செய்யும் போது முந்திரி பருப்பை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
தேங்காய் சட்னியில் மோர் சேர்த்து கொதிக்க வைத்து தாளித்து இறக்கினால் மோர் குழம்பு ரெடி ஆகிவிடும்.