Paneer Fingers Roll : சுவையான பனீர் ஃபிங்கர்ஸ் ரோல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பன்னீர், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், மைதா மாவு - 4 டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், தண்ணீர், பிரட் தூள்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் பனீரை நீளமாக வெட்டி கொள்ளவும். அடுத்தது பிரட் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்
அடுத்தது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து மிக்ஸ் செய்து 10 நிமிடம் ஊறவிடவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அடுத்தது, பனீர் துண்டுகளை மைதா மாவில் மிக்ஸ் செய்து பிரட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பனீர் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான பனீர் பிங்கர்ஸ் ரோல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -