Mushroom Pakoda : மொறு மொறுவென மஷ்ரூம் பக்கோடா.. மழைக்காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்!
தேவையான பொருட்கள்: காளான் - 100 கிராம், வெங்காயம் - 1 , பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி , புதினா இலைகள், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயம் தூள், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு, அரிசி மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு - 5 டீஸ்பூன், தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு பாத்திரத்தில் மஷ்ரூமை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அடுத்தது நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,கொத்தமல்லி புதினா அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்தது மஞ்சள் தூள், பெருங்காயம் தூள், மிளகாய் தூள், சீராக தூள், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்க்கவும்.
அடுத்தது தண்ணீர் சேர்த்து கட்டியான பகோடா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மஷ்ரூமை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் பகோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -