Sulaimani Tea:புத்துணர்ச்சி தரும் கேரள ஸ்பெஷல் சுலைமானி தேநீர் ரெசிபி!
கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம். கட்டஞ்சாயா என்ற கடும் டீ தான் பரவலாக அருந்துகிறார்கள் என்றாலும் கூட மசாலாப் பொருட்களை சேர்த்து இனிப்பு புளிப்பு என்று தரப்படும் சுலைமானி டீ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: 1.5 கப் தண்ணீர் 1 டீஸ்பூன் தேநீர் 1 டீஸ்பூன் தேயிலை 2 கிராம்பு 2 பச்சை ஏலக்காய் அரை இன்ச் பட்டை1 டீஸ்பூன் லெமன் ஜூஸ் 4 புதினா இலைகள் இதில் இஞ்சி ஆப்ஷனல். சிலர் இஞ்சி விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.
தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும். பின்னர் கடைசியாக தேயிலை சேர்க்கவும்.
3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும். பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.
ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது இந்த தேநீர். அதேபோல் இந்தத் தேநீர் மழை, குளிர் காலங்களில் பருக இதமானதாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -