Kaara Bonda : அசத்தலான கார போண்டா.. இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : கடலை பருப்பு - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 125 கிராம், தண்ணீர் , வெங்காயம் - 1 , இஞ்சி, பச்சை மிளகாய் - 3 , கறிவேப்பிலை, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1/4 தேக்கரண்டி, அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை, எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்தது ஊற வைத்த பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மிளகாய் தூள், ஓமம், அரிசி மாவு , கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை எடுத்து சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போடவும்.
போண்டா எல்லா பக்கமும் நன்றாக சிவந்து பொன்னிறமாக வந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்தால் சுவையான கார போண்டா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -