Butter Chicken : நாவூற வைக்கும் பட்டர் சிக்கன் ரெசிபி இதோ!
தேவையான பொருள்கள் : 350 கிராம் எலும்பு இல்லாத சிக்கன், 1 கப் வெங்காயம் நறுக்கியது, 3/4 கப் தக்காளி நறுக்கியது, தக்காளி விழுது அல்லது சாஸ், 3 டீஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய், 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு, 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 முதல் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 பெரிய சிட்டிகை கஸ்தூரி மேத்தி ,1 கப் பால், 3 டீஸ்பூன் கிரீம் , தேவையான அளவு உப்பு , மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,கொத்தமல்லி இலைகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் வெண்ணையை சேர்த்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும் மனம் வரும் வரை வதக்கவும்.
அதன் பின் , தக்காளி விழுது ,கஸ்தூரி மேத்தி, பால் மற்றும் கோழி துண்டுகள், சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும் . பிறகு கோழி தண்ணீர் விடும் வரை மூடி போட்டு மூடிவைக்கவும்.
8-10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும் . சிக்கன் மென்மையாக வெந்ததும், மூடியைத் திறந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் சமைக்கவும்.
அடுத்தது, கரம் மசாலா மற்றும் கிரீம் சேர்த்து நன்றாக கிளறிவிடவும் கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் பட்டர் சிக்கன் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -