Sweet Corn Pulao : ஸ்வீட் கார்னில் புலாவ்.. செய்து பாருங்க வேற மாதிரி இருக்கும்!
தேவையான பொருட்கள்: சோள முத்துக்கள் - 180 கிராம், நெய் - 2 மேசைக்கரண்டி, ஏலக்காய் - 3 ,பட்டை - 1 துண்டு, கிராம்பு -4, அன்னாசிப்பூ - 1, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு, பாஸ்மதி அரிசி - 1 கப், தேங்காய் பால் - 1 கப்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி, ஸ்வீட் கார்னை சேர்த்து 2 விசில் வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது குக்கரில் மீண்டும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
அடுத்தது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது வேகவைத்த ஸ்வீட் கார்னை வெங்காயத்துடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். அடுத்தது பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது ஒரு கப் தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து மிதமான சூட்டில் 2 விசில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான ஸ்வீட் கார்ன் புலாவ் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -