Sweet Corn Pakkoda : மொறு மொறுவென ஸ்வீட் கார்ன் பக்கோடா... மாலை நேரத்தில் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!
தேவையான பொருட்கள் : ஸ்வீட் சோளம் - 1 (வேகவைத்தது), வெங்காயம் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி , கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, கடலை மாவு - 250 மி .லி, அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி , கொத்தமல்லி இலை நறுக்கியது, தண்ணீர், எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதல் ஸ்வீட் கார்னை வேகவைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் கார்ன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
அடுத்தது மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்தது கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலக்கவும். அதன்பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்து வைத்துள்ள கார்னை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கார்ன் பக்கோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -