Egg Soup : காய்ச்சலுக்கு இதமான முட்டை சூப்.. குடித்து பாருங்க!
தேவையான பொருட்கள் : 2 முட்டை, 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 டீஸ்பூன் சோம்பு, 3/4 டீஸ்பூன் சீரகம்,1 டீஸ்பூன் மிளகு தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு , 2 பட்டை, 4 கிராம்பு, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு, 1/4 டீஸ்பூன் தனியா தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சீரகம்,சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்.
அடுத்தது மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்தது 600 மிலி தண்ணிர் மற்றும் உப்பு சேர்த்து கடாயை முடி வைத்துக் 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். அதன்பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.
அடுத்தது வடிக்கட்டிய சூப்யை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதன் பின் முட்டையை உடைத்து கலக்கி கொள்ளவும்.
அடுத்தது கலக்கி வைத்துள்ள முட்டையை சூப்பில் சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முட்டை சூப் தயார்