Rose Milk Fruit Mixer : இதமான ரோஸ் மில்க் ப்ரூட் மிக்ஸர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பால் - 2 கப், ரோஸ் சிரப்- 3 டீஸ்பூன், சர்க்கரை-2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் சில துண்டு, வாழைப்பழம் நறுக்கியது- 4 , மாம்பழம் நறுக்கியது - 1 கப், அன்னாசி நறுக்கியது - 1 கப், ஆப்பிள் நறுக்கியது - 1 கப், மாதுளைப்பழம் - அரை பழம், திராச்சை ஒரு கொத்து.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் மிக்ஸர் ஜாரில் 2 கப் பாலை சேர்க்கவும். அடுத்தது பாலில் 2 டீஸ்பூன் ரோஸ் சிரப், சில ஐஸ் கட்டிகள் சேர்த்து 2 நிமிடம் அரைக்கவும்.
அதன் பிறகு மீண்டும் ஒரு டீஸ்பூன் ரோஸ் சிரப், ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள், மாதுளை, அன்னாசி, வாழைப்பழம், மாம்பழம், திராச்சை அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்தது அனைத்து பழங்களையும் மத்து வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு பெரிய கண்ணாடி க்ளாசில் முதலில் ரோஸ் மில்க் பாதி அளவு சேர்க்கவும். அதன் பின் கடைந்து வைத்த பழங்களை சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக சில ஐஸ் துண்டுகள் சேர்த்தால் சுவையான ரோஸ் மில்க் மிக்ஸர் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -