Sweet Corn Masala : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஸ்வீட் கார்ன் மசாலா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் - 400 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, சீரகம் , பட்டை , கிராம்பு, ஏலக்காய் , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 2 கீறியது , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி விழுது - 3 பழம், தண்ணீர் - 2 கப், முந்திரி பருப்பு விழுது, கரம் மசாலா தூள் -1 தேக்கரண்டி, கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடம் வேகாது எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அவற்றை வதக்கவும்.
சீரகம் பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும். அதன் பின் வேகவைத்த ஸ்வீட் கார்னை சேர்த்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி வைத்து10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
அடுத்து கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் ருசியான ஸ்வீட் கார்ன் மசாலா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -