Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Potato Rice : புளி சாதம், லெமன் சாதம் போர் அடிச்சிடுச்சா? சூப்பரான வெரைட்டி ரைஸ் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: உருளைகிழங்கு - 2 , உப்பு , கறிவேப்பிலை , வெள்ளை சாதம் , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி , கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , மிளகு - 1 தேக்கரண்டி , சிவப்பு மிளகாய் -7 , மல்லி விதை - 2 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, புளி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநல்லலெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் -2 , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
செய்முறை: முதலில் கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சிறிது நேரம் ஆறவிட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை சேர்த்து கிளறி விடவும்.
அடுத்தது இந்த மசாலா கலவையில் வேகவைத்த சாதத்தை சேர்த்து மசாலாவோடு நன்கு கிளறினால் சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -