Mango Malai Toast:சுவையான மாம்பழ மலாய் டோஸ்ட் - செய்முறை இதோ!
மலாய் மாம்பழ பிரெட் டோஸ்ட்: என்னென்ன தேவை? பிரெட் - ஒரு பாக்கெட் மாம்பழம் - 3 ஃப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு வெண்ணெய் - ஒரு கப் ஏலக்காய் பொடி - சிறிதளவு சர்க்கரை - சிறிதளவு கன்டன்ஸ்டு மில்க் - தேவையான அளவு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாம்பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நன்றாக பழுத்த மாம்பழத்தை தேர்ந்தெடுக்கவும். மிக்ஸியில் ஏலக்காய் சர்க்கரை ஒரு க்ரைண்ட் செய்து எடுத்துகொள்ளவும்
இப்போது தோசை கல்லில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுக்கவும். பிரெட் பொன்னிறமாக மாறியதும் அதன் ஒருபுறம் ப்ரெஷ் க்ரீம் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும்.
தேவையான பிரெட் துண்டுகளை ஃப்ரெஷ் க்ரீம் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவேண்டும். இப்போது பிரெட் மீது ப்ரெஷ் க்ரீம் தடவி அதன் மீது ஏலக்காய் பொடி, சர்க்கரை தூவி மாம்பழ துண்டுகளை வைக்கவும்.
அதன் மீது கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். அவ்வளவுதான் எளிதான மாம்பழ டோஸ்ட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -