Special Chicken Sandwich: மாலை நேர ஸ்நாக்ஸ்; ஸ்பெஷல் சிக்கன் சான்விச் - ரெசிபி இதோ!
குக்கரில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி சிக்கனை வேகவிடவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்பு சிக்கனில் எலும்புகளை நீக்கி உதிர்த்து தனியாக எடுத்து வைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிக்கனை சேர்த்து கலந்துவிடவும். அதில் தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து கலந்துகொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
அடுத்து பானில் எண்ணெய் ஊற்றி அதில் அடித்த முட்டை கலவையை ஊற்றவும். அதன் மேல் 2 பிரட் துண்டுகளை வைக்கவும்.
பிறகு சிக்கன் பில்லிங்-ஐ ஒரு பிரட் துண்டின் மேல் வைத்து ஆம்லெட்டை ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கம் திருப்பி விட்டு மெதுவாக அழுத்திவிடவும்.அதை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். ஸ்பெஷல் சிக்கன் சான்விச் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -