Spaghetti Recipe:சுவையான ஸ்பெகட்டி எப்படி செய்வது?இதோ ரெசிபி!
முதலில் தக்காளியை கீறி சூடு தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு ஆறவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மற்றும் ஸ்பெகட்டியை சேர்த்து 20 நிமிடம் வேகவைக்கவும். தண்ணீரை வடிகட்டி அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
ஒரு கடாயில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இப்போது உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். அரைத்த தக்காளி விழுதுதை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
வேகவைத்த ஸ்பெகட்டியை சேர்த்து கலந்து விடவும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேசில் இலை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பார்மஷான் சீஸை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான ஸ்பெகட்டி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -