Soya Pulao : சிக்கன் பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் அட்டகாசமான சோயா புலாவ்.. இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : சோயா - 1 கப், தயிர் - 1/4 கப், பாஸ்மதி அரிசி - 250 மிலி, நெய் - 2 மேசைக்கரண்டி, தக்காளி - 2 , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, தக்காளி - 2 , முழு மசாலா, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 3 சீரகம் - சிறிதளவு, வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 2 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, தக்காளி - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, புதினா இலைகள், கொத்தமல்லி தழை, உப்பு, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சோயாவை சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கப் பாசுமதி அரிசியை தண்ணீரில் இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோயா, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிய பின்பு இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும்
அடுத்தது ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மசாலாவில் ஊறவைத்த சோயா சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்தது புதினா இலை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான சோயா புலாவ் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -