Muttai Paniyaram : முட்டையில் பணியாரமா? இன்றே செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்: முட்டை - 4, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி -1, பச்சை மிளகாய் - 2 கேரட் - 1, முட்டை கோஸ் - 1/2, கொத்தமல்லி இலை -1/2 கப் , எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
முட்டையில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், முட்டை கோஸ்,கொத்தமல்லி இலை அனைத்தையும் பொடியாக நறுக்கி கலக்கிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
முட்டை நன்கு பொன்னிறமாக வரும் வரை இருபுறமும் வேகவிடவும் .வெந்ததும் தட்டில் எடுத்து போட்டு பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -