Cooking Tips : எந்த வகையான கிரேவி செய்தாலும் அதில் இதை சேருங்க.. சுவை அசத்தலாக இருக்கும்!
எந்த வகையான கிரேவி செய்தாலும் கால் கப் அளவிற்கு கடலை பருப்பை வறுத்து பொடியாக்கி கிரேவியில் சேர்த்தால், அது சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிரை, அரை டீஸ்பூன் சேர்த்தால் வறுவல் சுவையாக இருக்கும்.
ரவையை பொடியாக அரைத்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தோசை மாவில் சேர்த்து கலந்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.
எள்ளை பொடியாக அரைத்து தக்காளி சட்னியில் கலந்து விட்டால் சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் வைத்து கூட்டோ அல்லது பொரியலோ செய்யும் போது சிறிதளவு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அருமையாக இருக்கும்.
உளுந்த வடைக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் வடை மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -